Latestமலேசியா

ECRL சிக்கன வகுப்பு டிக்கெட்டுகளுக்கு அறிமுக மாதத்தில் 30% தள்ளுபடி – லோக்

கோலாலம்பூர், அக்- 20-கிழக்குக் கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) சேவை தொடங்கும் முதல் மாதத்தில், அனைத்து சிக்கன வகுப்பு டிக்கெட்டுகளுக்கும் 30 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்திருக்கிறார்.

ECRL சேவையை டிசம்பர் 12-ஆம் தேதி வாக்கில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேவை தொடங்குவதற்கு முன்னதாகவே டிக்கெட் விற்பனை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். சிறப்புக் கட்டணச் சலுகைகளுக்குத் தகுதி பெறாத பயணிகளுக்கும் இந்த 30 விழுக்காடு தள்ளுபடி பொருந்தும் என்றாரவர்.

மேலும், இரண்டு முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கப்படும். அதேவேளை, 13 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 40 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என லோக் விளக்கினார்.

இதனிடையே, கோம்பாக் – கோத்தா பாரு இடையிலான ஒரு வழிப் பயணத்திற்கான சிக்கன வகுப்பு கட்டணம், transit சேவைக்கு 125 ரிங்கிட்டிலிருந்தும் எக்ஸ்பிரஸ் சேவைக்கு 147 ரிங்கிட்டிலிருந்தும் தொடங்கும் என Malaysia Rail Link Sdn Bhd தலைமை செயல்முறை நிர்வாக அதிகாரி Datuk Seri Darwis Abdul Razak நேற்று கூறியிருந்தார். கோம்பாக் – கோலா திரங்கானு இடையிலான கட்டணம் முறையே 95 மற்றும் 110 ரிங்கிட்டிலிருந்தும், கோம்பாக் – கோத்தா சாஸ் இடையிலான கட்டணம் 60 மற்றும் 68 ரிங்கிட்டிலிருந்தும் தொடங்கும்.

523 கிலோமீட்டர் நீளமுள்ள ECRL ரயில் பாதை, கிளந்தானின் கோத்தா பாருவையும் சிலாங்கூரின் கோம்பாக்கில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்தையும் இணைக்கிறது. அதன் வழி கிளந்தான், திரங்கானு, பகாங் ஆகிய கிழக்குக் கடற்கரை மாநிலங்கள் சிலாங்கூருடன் இணைக்கப்படுகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!