Latestமலேசியா

நிறுவன நிர்வாக விவகாரம்: தந்தை, சகோதரியுடனான சர்ச்சையைத் தீர்த்துக் கொண்டார் பூப்பந்து நட்சத்திரம் Lee Zii Jia

கோலாலம்பூர், அக்-20-தேசிய பூப்பந்து வீரரரான Lee Zii Jia, தமது நிறுவனமான LZJ Management Sdn Bhd-இன் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பில் தந்தை Lee Chee Hin, மூத்த சகோதரி Lee Zii Yii மற்றும் இளைய சகோதரர் Lee Taoவுடன் கொண்டிருந்த சர்ச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். அது குறித்த உடன்பாட்டுத் தீர்ப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று பதிவு செய்தது. வெளிநாட்டில் இருப்பதால் Zii Jiaவின் மூத்த சகோதரி நீதிமன்றத்திற்கு வரவில்லை.

சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்புக் கொண்ட நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதன்படி, அக்டோபர் 31ஆம் தேதி நிறுவனத்தின் சிறப்புப் பொதுக் கூட்டத்தை நடத்தவும், அதற்கான செலவுகளை நிறுவனமே ஏற்கவும் முடிவு செய்யப்பட்டது.

அக்கூட்டம் நடைபெறும் வரை, Zii Jiaவின் தந்தையும் மூத்த சகோதரியும் தங்களுக்கான இயக்குநர் ஊதியம், போனஸ் மற்றும் பிற நிதிச் சலுகைகளைத் தாங்களே அங்கீகரிக்கவோ வழங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2026 செப்டம்பர் 1 முதல் கணக்கிடப்படும் மாதாந்திர ஊதியங்களுக்கு அத்தடை பொருந்தாது.

மேலும், நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி இயக்குநர்களை நியமிப்பது அல்லது நீக்குவது, நிறுவனச் செயலாளரை நியமிப்பது, முக்கிய சொத்துகளை விற்பனை செய்வது, புதிய பங்குகளை வெளியிடுவது மற்றும் நிறுவனத்தின் நிர்வாகத்தைக் கணிசமாகப் பாதிக்கும் முடிவுகளை எடுப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வழக்குச் செலவுகள் தொடர்பாக நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

கடந்த ஜூலை 2ஆம் தேதி, நிறுவனத்தின் நிதி மற்றும் நிர்வாக முடிவுகளில் தனது தந்தையும் சகோதரியும் தலையிடுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவைக் கோரி Zii Jia மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!