Latestமலேசியா

கரையான் அரிப்பால் பாதுகாப்பற்ற நிலையில் தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளிக் கட்டிடம்; புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை

தம்புன், அக்-20 – பேராக், தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளிக் கட்டிடத்தின் ஒரு பகுதி கரையான் அரிப்பால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித்துறை தயாரித்துள்ள விரிவான ஆய்வறிக்கையில், சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் ஒரு பகுதி பாதுகாப்பற்றது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தம்புன் நாடாளுமன்றத் தொகுதிக்கான சிறப்பு அதிகாரி டத்தோ அ. சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய கட்டிடம் அமைப்பதற்கான திட்டமிடல் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறினார்.

அக்கலந்துரையாடலில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், தலைமையாசிரியர், வட கிந்தா மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, புதிய கட்டிடத்தை விரைவில் கட்டுவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுரேஷ்குமார் மேலும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!