Latestமலேசியா

மாற்றாந்தாய் சகோதரிக்கு பாலியல் துன்புறுத்தல்; சந்தேக ஆடவன் நீதிமன்றத்தில் ஆஜர்

மலாக்கா, அக்டோபர் 23 – மலாக்கா, ஆயர் கெரோ (Ayer Keroh) செஷன்ஸ் நீதிமன்றத்தில், 15 வயது மாற்றாந்தாய் சகோதரியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 29 வயது ஆடவன் மீது இன்று இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை நீதிபதியின் முன்னிலையில் வாசிக்கப்பட்டபோது சந்தேக ஆடவன் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளான்.

கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மற்றும் இவ்வாண்டு அக்டோபர் 15ஆம் தேதி, இரண்டு வெவ்வேறு வீடுகளில் இச்சம்பவங்கள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

நீதிமன்றம் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 10,000 ரிங்கிட் பிணையை ஒரு உத்தரவாததாரருடன் அனுமதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியையும் சாட்சிகளையும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் நிபந்தனை விதித்தது. இந்த வழக்கு ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காக வரும் நவம்பர் 23ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!