
சுங்கை பாக்காப், அக்டோபர்-26,ஆறாம் படிவ மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 2,500 ரிங்கிட் வாழ்க்கைச் செலவு உதவித்தொகை, மூன்று கல்விப் பருவங்களாகப் பிரித்து வழங்கப்படவுள்ளது.
கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்களின் பதிவை முடித்தவுடன், அடுத்தாண்டின் முதல் பருவத்திலிருந்தே இந்த உதவித்தொகையைப் பெறத் தொடங்குவார்கள் என்றார் அவர்.
இதன்படி ஒரு பருவத்திற்கு 800 ரிங்கிட்டுக்கும் அதிகமாக வழங்கப்படும்.
கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 90,000 ஆறாம் படிவ மாணவர்கள் பயனடைவார்கள்.



