
டுங்குன், அக்டோபர்-26,திரங்கானு, டுங்குனில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் கணவன்-மனைவி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாயினர்.
குவாலா திரங்கானு – குவாந்தான் சாலையின் 90-ஆவது கிலோ மீட்டரில், Bukit Bauk அருகே நேற்று மாலை 5 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்தவர்கள் 32 வயது Mohamad Zulkifli Ishak, அவரது 36 வயது மனைவி Norshila Zali மற்றும் Zulkifli-யின் தம்பியான 18 வயது Muhammad Alif Syukri என அடையாளம் காணப்பட்டனர்.
குவாந்தானில் உள்ள சுல்தான் அஹ்மட் ஷா பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் தம்பியை அழைத்துக்கொண்டு, கிளந்தானில் உள்ள தங்களது வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது.
அவர்கள் பயணித்த Nissan Grand Livina வாகனம், தெனாகா நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 சக்கர வாகனத்துடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த மற்றொருவர் டுங்குன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மற்றொரு வாகனத்தில் பயணித்த இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.



