Latestமலேசியா

NADI மையங்கள் வாயிலாக இலவச ‘e-Tuisyen Rakyat’ திட்டம்: ஃபாஹ்மி தகவல்

கோலாலாம்பூர், அக்டோபர்-24,தற்போதையச் சூழலில் டியூஷன் கட்டணங்கள் அதிகரித்து வரும் நிலையில், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வியை உறுதிச் செய்யும் வகையில் இலவச ‘e-Tuisyen Rakyat’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

NADI எனப்படும் தேசிய தகவல் பரவல் மையங்கள் வாயிலாக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகத், தொடர்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

படிவம் 1 முதல் படிவம் 6 வரையிலான மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில், மலாய் மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய முதன்மைப் பாடங்கள் இணையவழியில் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றன.

வீட்டில் கணினி அல்லது சரியான இணைய வசதி இல்லாத மாணவர்கள், அருகில் உள்ள NADI மையங்களுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள வசதிகளைப் பயன்படுத்தி வகுப்புகளில் பங்கேற்கலாம்.

இத்திட்டத்தின் பயனாக, கடந்த SPM தேர்வில் NADI மையங்கள் வாயிலாகப் பயின்ற 36 மாணவர்கள் 7A மற்றும் அதற்கு மேற்பட்ட சிறந்த முடிவுகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளதாக ஃபாஹ்மி சொன்னார்.

ஒரு பிள்ளையின் கல்வி வாய்ப்பு என்பது பெற்றோரின் நிதி ஆதாரத்தைச் சார்ந்திருக்கக் கூடாது என்ற நோக்கில் இச்சேவை வழங்கப்படுகிறது.

எனவே, தங்களுக்கு அருகில் உள்ள NADI மையங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் பயன்பெறலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!