
லண்டன், அக்டோபர் 27 – இங்கிலாந்து கால்பந்து அணியின் தலைவர் ஹாரி கேன் (Harry Kane), உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d’Or) விருதை வென்றுள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இந்த விருதைப் பெறும் முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த பருவத்தில் கிளப் மற்றும் நாட்டுக்காக 65 போட்டிகளில் 73 கோல்களை அடித்த கேன், பிரான்ஸின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappé), ஸ்பெயினின் லமீன் யமால் (Lamine Yamal) ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி இந்த விருதை வென்றார். அவர் விளையாடும் பேயர்ன் முனிச் (Bayern Munich) அணி, ஜெர்மன் லீக் மற்றும் ஜெர்மன் கோப்பையை வென்றது.
இந்த விருது கிடைத்தது தமக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்ததாகக் கூறிய 33 வயதான கேன், அடுத்ததாக பேயர்ன் முனிச் அணியுடன் சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும், இங்கிலாந்து அணியுடன் முக்கிய சர்வதேசக் கோப்பையையும் வெல்ல விரும்புவதாகத் தெரிவித்தார்.



