Latestமலேசியா

நிக் நஸ்மியிடம் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை – JAIS

ஷா ஆலாம், அக்டோபர் 27 – முன்னாள் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமட் (Nik Nazmi Nik Ahmad), தகாத முறையில் தனிமையில் இருந்த குற்றச்சாட்டு தொடர்பாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையிடம் (JAIS) இன்று மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வாக்குமூலம் அளித்தார்.

இன்று காலை 9.15 மணிக்கு JAIS தலைமையகத்துக்கு வந்த அவர், பிற்பகல் 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார்.

சிலாங்கூர் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ் நடைபெறும் விசாரணையின் ஒரு பகுதியாக நிக் நஸ்மியிடமும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், நிக் நஸ்மி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமா என்பதை சிலாங்கூர் ஷரியா வழக்குத் தொடர்தல் துறை முடிவு செய்யும் என்றார்.

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பெட்டாலிங் (Petaling) பகுதியில் திருமண உறவில்லாத பெண்ணுடன் தனியிடத்தில் இருந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் தாம் கைது செய்யப்பட்டதை நிக் நஸ்மி முன்னதாக உறுதிப்படுத்தியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!