
சுங்கை பட்டாணி, அக்டோபர்–30,சுங்கை பட்டாணியில் ‘Bomba’ என எழுதப்பட்ட சிவப்பு நிற MPV வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய 35 வயது ஆடவரை கெடா போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
அந்த ஆடவர் மற்ற வாகனமோட்டுநர்களை வழிவிடுமாறு திட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பண்டார் புத்ரி ஜெயாவில் அவர் கைதுச் செய்யப்பட்டார்.
சம்பந்தப்பட்ட ஆடவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு _bipolar disorder_ எனப்படும் இருமுனை மனநிலைக் கோளாறால் பாதிக்கப்பட்டதாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சையை நிறுத்தியிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவருக்கு முறையான ஓட்டுநர் உரிமம் இருப்பதுடன், போதைப்பொருள் பரிசோதனையிலும் எதிர்மறையான முடிவு கிடைத்துள்ளது.
அரசு ஊழியராக ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனமோட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த ஆடவர் பின்னர் சிகிச்சைக்காக சுங்கை பட்டாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



