
கோலாலம்பூர், நவம்பர்-1,வடகிழக்குப் பருவமழை மற்றும் சூப்பர் எல் நினோ பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் மாதங்களில் மலேசியா வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இருவிதமான இயற்கைப் பேரிடர் அபாயங்களையும் எதிர்கொள்ளக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.
அதே சமயம், எல் நினோவின் தாக்கம் தீவிரமடைந்தால், அடுத்தடுத்த மாதங்களில் வெப்பநிலை அதிகரிப்பதுடன், மழைப்பொழிவு குறைந்து வறட்சி ஏற்படக்கூடும்.
இத்தகைய பருவநிலை மாற்றங்கள் நீர் விநியோகம், விவசாயம் மற்றும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என, வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரு சூழ்நிலைகளையும் எதிர்கொள்ள முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் என மக்களுக்கு நினைவுறுத்தப்படுகிறது.



