Latestமலேசியா

செயல்படாத தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை மூட உத்தரவு – அமைச்சர் சம்ரி

கோலாலம்பூர், நவம்பர்-12,நாட்டில் செயல்படாமல் இருக்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மூடுவதற்கு உயர் கல்வி அமைச்சு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சம்ரி அப்துல் காடிர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அதனடிப்படையில், செயல்படாத கல்வி நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் 2027 பட்ஜெட் விவாதத்தின்போது அவர் தெரிவித்தார்.

செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, நாட்டில் 359 தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 65 பல்கலைக்கழகங்கள், 39 பல்கலைக்கழகக் கல்லூரிகள், 11 வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள் மற்றும் 244 கல்லூரிகள் அடங்கும்.

இதனிடையே, சபாவில் உள்ள மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தாவாவ் வளாகம் மூடப்படாது என்றும் சம்ரி உறுதியளித்தார்.

அந்த வளாகத்தின் வசதிகளை மேலும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!