
தெலுக் இந்தான், நவ13-பேராக்கில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஏழு மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக 56 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் மீது sesyen நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் Zaidi Abbas தம் மீது சுமத்தப்பட்ட அனைத்து 17 குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரினார்.
2024-ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2025-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி வரை, Langkapப்பில் உள்ள பள்ளியொன்றின் சிறப்பு அறை, சிற்றுண்டிச் சாலை, வாகனம் மற்றும் பயணத்தின்போது அவர் அக்குற்றங்களைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத்தண்டனையும் பிரம்படி தண்டனையும் விதிக்கப்படலாம்.
70,000 ரிங்கிட் பிணைத் தொகையுடன், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொள்ளக்கூடாது, மாதந்தோறும் காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும், குறைந்த வருமானம், குடும்பப் பொறுப்புகள் மற்றும் முந்தைய குற்றப் பின்னணி இல்லாத நிலையைச் சுட்டிக் காட்டி பிணைத் தொகையைக் குறைக்குமாறு Zaidiயின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
அதனை அடுத்து, நீதிமன்றம் 40,000 ரிங்கிட் பிணைத் தொகையை அனுமதித்ததுடன், அரசுத் தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளையும் விதித்தது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.



