Latestமலேசியா

ஜோகூர் செனாய்–டேசாரு நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் பலி, இருவர் காயம்

ஜோகூர், நவம்பர் 16 – ஜோகூர், கோத்தா திங்கி அருகே செனாய்–டேசாரு நெடுஞ்சாலையின் 52.5ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதிகாலையில் நிகழ்ந்த இந்த விபத்தில் புரோட்டான் X70, புரோட்டான் பெர்சோனா (Proton Persona) மற்றும் டொயோட்டா அன்சர் (Toyota Unser) ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.

இதில், 58 வயது ஆடவரும் 26 வயது பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 51 மற்றும் 47 வயதுடைய இரு பெண்கள் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். டொயோட்டா அன்சர் காரில் பயணித்த ஆடவர் காயமின்றி உயிர் தப்பினார்.

வாகனங்களில் சிக்கியிருந்த இரு உயிரிழந்தவர்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்ட பின்னர் அவர்களின் உடல்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!