
சபா, நவம்பர் 20 – சபா செம்போர்னா, புலாவ் பூம்-பூம், கம்போங் ஹிடாயாட் 2 (Pulau Bum-Bum Kampung Hidayat 2) பகுதியில் நடைபெற்ற ‘Ratu Pondam’ எனப்படும் ‘திருநங்கைகளின் ராணி’ அழகிப் போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாநில இஸ்லாமிய சமய விவகாரத் துறை (JHEAINS) மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.
கைது செய்யப்பட்டவர்கள் 14 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் பெண்களைப் போன்று உடையணிந்திருந்ததாகவும் செம்போர்னா இஸ்லாமிய சமய விவகாரத் துறை அதிகாரி முகமட் யூசெப் அஹ்மட் கப்பாலா (Mohd Juseph Ahmad Kapala) தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் நால்வர் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாத வெளிநாட்டவர்கள் ஆவர். ஏனையவர்களிடம் IMM13 அகதிகள் அடையாள அட்டையும் மலேசிய அடையாள அட்டையும் இருந்தன.
மேலும், அந்தப் போட்டியுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



