
கோலாலம்பூர், நவ.20-இவ்வாண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை, ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) கீழ் நாட்டில் 2,27,414 ரோஹிங்கியா அகதிகளும் புகலிடம் நாடியவர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 2,05,273 பேர் (90.2 விழுக்காடு) மியன்மாரைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 1,32,400 பேர் ரோஹிங்கியா இனத்தவர்கள் என உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
UNHCR அட்டை வைத்திருப்பவர்களில் அதிகமாக 74,028 பேர் (33 விழுக்காடு) சிலாங்கூரில் வசிக்கின்றனர். அடுத்ததாக கோலாலம்பூரில் 47,333 பேரும், பினாங்கில் 25,357 பேரும் உள்ளனர். இந்தப் புள்ளிவிவரம் ரோஹிங்கியா இனத்தவர்களை மட்டும் உள்ளடக்கியிருக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தினார்.
இதனிடையே, அக்டோபர் 31ஆம் தேதி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவின் குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் மியன்மாரைச் சேர்ந்த 11,208 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6,294 பேர் ரோஹிங்கியா இனத்தவர்கள். மேலும், 2022ஆம் ஆண்டு முதல் 2026 ஆகஸ்ட் வரை மியன்மார் அகதிகள் தொடர்பான 199 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக Saifuddin கூறினார்.
UNHCR அடையாள அட்டைகளைப் போலியாகத் தயாரித்தது தொடர்பாக, கோலாலம்பூரில் மியன்மாரைச் சேர்ந்த ஆறு பேர் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் குறிப்பிட்டார்.



