
சிட்னி, நவம்பர்-21,ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது பிரியாவிடை உரையின் போது காதலிக்குத் திருமண _proposal_ செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ரைட் தொகுதி உறுப்பினரான 32 வயது Jordan Lane, அரசியலிலிருந்து விலகும் முடிவைத் தொடர்ந்து, அவையில் தனது இறுதி உரையை நிகழ்த்தினார்.
அப்போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தன்னுடன் காதல் உறவில் இருக்கும் Natalie-யை நோக்கி, _”என்னைத் திருமணம் செய்துகொள்வாயா?”_ எனக் கேட்டார்.
இதைக் கேட்டதும், அவை மாடத்தில் அமர்ந்திருந்த காதலி அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைந்தார்.
பின்னர், மோதிரத்தை எடுத்து அவருக்குத் திருமண _proposal_ செய்தார்.
இதைச் சற்றும் எதிர்பாராத Natalie, மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்க, இருவரும் அன்பில் ஆரத் தழுவினர்.
இதையடுத்து, சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி இருவரையும் வாழ்த்தினர்.
தனது காதலி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்ததை நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வப் பதிவிலும் சேர்க்குமாறு Jordan Lane, சபாநாயகரிடம் நகைச்சுவையாகக் கேட்டுக் கொண்டார்.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.



