Latestஉலகம்

கனடாவில் இந்திய வம்சாவளி காதல் ஜோடி சுட்டுக் கொலை; திட்டமிட்ட தாக்குதல் என போலீஸ் சந்தேகம்

ஒட்டாவா, நவம்பர்-22 – கனடாவில் பிரபல Walmart பேரங்காடிக்கு வெளியே, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காதல் ஜோடி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) மாநிலத்தில் நவம்பர் 15-ஆம் தேதி இரவு இச்சம்பவம் நிகழ்ந்தது.

உயிரிழந்தவர்கள் 23 வயது Gaganpreet Rehal மற்றும் அவரது காதலியான 24 வயது Sukhjeet Kaur என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்தனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், பின்னணியில் குற்றச்செயல் கும்பல்களின் தொடர்பு இருக்கலாம் என்றும் கனடா போலீஸ் சந்தேகிக்கிறது.

உயிரிழந்த ஆடவர், ஆயுதங்கள் தொடர்பான குற்றங்களுக்காக ஏற்கனவே போலீஸாருக்குத் தெரிந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடந்த சிறிது நேரத்தில் அருகிலுள்ள பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அது தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இரட்டைக் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய போலீஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!