
லாபுவான், நவம்பர் 27 – லாபுவான், கம்போங் பாத்தாவ்-பாத்தாவ் டுவா (Kampung Patau-Patau Dua) கிராமத்தில், வீட்டிற்கு அருகிலுள்ள பாலத்திலிருந்து தவறி விழுந்த ஆறு வயது ஆட்டிசம் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.
நேற்று இரவு 10.30 மணியளவில் சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்தைச் சென்றடைந்து தேடுதல் பணியைத் தொடங்கினர்.
நள்ளிரவு சிறுவன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்ததை மருத்துவப் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர்.
பின்னர், சிறுவனின் உடல் மேல்நடவடிக்கைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.



