Latestமலேசியா

திரெங்கானுவில் தொழிற்சாலையில் தீ விபத்து; இரு தொழிலாளர்கள் காயம்

திரெங்கானு, கெமாமான், நவம்பர் 27 – திரெங்கானு, கெர்த்தே தொழிற்பேட்டையிலுள்ள பயன்படுத்தப்பட்ட எண்ணெய் மறுசுழற்சி தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் இரு தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

நேற்றிரவு, தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, 46 தீயணைப்பு வீரர்கள் ஒன்பது வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக மாநில தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் ஷாரின் யுஸ்மா மாட் யூசோப் (Shahrin Yusma Mat Yusof) தெரிவித்தார்.

சம்பவத்தின்போது 15 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். உலையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீ பரவி, எண்ணெய் பீப்பாய்களுக்குத் தீப்பற்றியது. இதில் கட்டுப்பாட்டு அறைக்கு அருகிலிருந்த இரு தொழிலாளர்கள் காயமடைந்து, அருகிலுள்ள சுகாதார மருத்துவமனையில் வெளிநோயாளிகளாகச் சிகிச்சை பெற்றனர்.

இந்த தீ விபத்து இரவு 10 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!