Latestஅமெரிக்காஉலகம்

AI தவறான நபர்களின் கைகளுக்குப் போனால் 100 கோடி உயிர்களைப் பறித்து விடும்: பில் கேட்ஸ் கடும் எச்சரிக்கை

நியூ யோர்க், செப்டம்பர்-27,AI தொழில்நுட்பம் தவறான நபர்களின் கைகளுக்குச் சென்றால், அது 1 பில்லியன் அதாவது 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களைப் பறிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளதாக, மைக்ரோசோஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் NBC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மேம்பட்ட AI கருவிகளுடன் தவறான எண்ணம் கொண்ட நபர்கள் இணைவது மனிதகுலத்திற்கே மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்றார் அவர்.

அண்மையில் ஆஸ்திரேலிய பொது சுகாதார தளத்தில் ஏற்பட்ட இணையத் தாக்குதல் மற்றும் ஏவுகணை பாய்ச்சலுக்கு AI மாதிரியைப் பயன்படுத்த தீவிரவாதக் கும்பல்கள் முயன்றது போன்ற சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

எனவே, இவ்விவகாரத்தில் நிறுவனங்களின் சுயக்கட்டுப்பாடு மட்டுமே போதுமானதாக இருக்காது;

மாறாக, AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்யவும் அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களை உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா அவசரமாக இயற்ற வேண்டும் என பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

வேலைவாய்ப்புச் சந்தையில் ஏற்படவுள்ள பெரும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, சில வேலைகளை மனிதர்களுக்கு மட்டுமே என ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கருத்துக் கூறிய ஒரு மாதத்தில் அவரின் இப்புதியக் கூற்று வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!