Latestமலேசியா

இனம் தடையல்ல மனிதநேயத்திற்கு; இந்திய மாணவனுக்கு உதவிய ‘காக் ஸிரா’ — மலேசியர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்த உண்மையான மலேசிய உணர்வு

கோலாலம்பூர், செப்டம்பர்-27,பள்ளிக்கூட சிற்றுண்டிச்சாலை பெண் பணியாளர் ஒருவர், ஏழ்மை நிலையிலுள்ள மாணவருக்குச் செய்த உதவி தொடர்பான செய்தி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு மலேசியர்களின் நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.

​Kak Zira என அழைக்கப்படும் அந்த ஊழியர், பள்ளி இடைவேளையின் போது உணவு வாங்கப் பணமின்றி கணினி ஆய்வுக் கூடத்திற்குப் பின்னால் தனியாக அமர்ந்திருந்த இந்திய மாணவனைக் கவனித்து, அவனுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வந்துள்ளார்.

​பள்ளி கூட்டுறவு தினத்தின் போது (Hari Koperasi), அந்த மாணவன் தனது நண்பர்களோடு மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காக அவனுக்குச் செலவுக்குப் பணத்தையும் கொடுத்த அவர், “பணம் பற்றாவிட்டால் வந்து என்னிடம் கேளுங்கள்” என்று அன்புடன் கூறியுள்ளார்.

​இனம், பின்னணி பாராமல் மனிதநேயத்துடன் உதவிய Kak Zira-வின் இந்தச் செயலை வலைத்தளவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!