Latestமலேசியா

கிள்ளான் பள்ளத்தாக்கை உலுக்கிய பலத்த புயல்; மரங்கள் சாய்ந்து வாகனங்கள் சேதம், பல பகுதிகளில் திடீர் வெள்ளம்

கோலாலம்பூர், செப்டம்பர்-27,கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனமழை, இடி மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக திடீர் வெள்ளமும் மரங்கள் முறிந்து விழுந்த சம்பவங்களும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

​நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறையின் InfoBanjir தளத்தின்படி, சிகாம்புட்டில் உள்ள 3 கண்காணிப்பு நிலையங்களிலும் பத்து பகுதியிலுள்ள ஒரு நிலையத்திலும் நீர்மட்டம் எச்சரிக்கை அளவை எட்டியது.

இதையடுத்து டாமான்சாரா, தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் (TTDI), சிகாம்புட், காஜாங், பாங்கி, பண்டார் ஸ்ரீ புத்ரா மற்றும் புக்கிட் மக்கோத்தா ஆகிய பகுதிகளில் திடீர் வெள்ளமும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டன.

​இதனிடையே, டாமான்சாரா டாமாய் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகளில் பலத்த காற்றுடன் கூடிய புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பங்சாபூரி சவ்ஜானாவில் மரக்கிளைகள் விழுந்து வாகனங்கள் சேதமடைந்ததுடன், சாலையோரச் சிறு வணிகர்களின் கூடாரங்களும் காற்றில் பறந்து நாசமாகின.

ஜாலான் டூத்தாவிலிருந்து புக்கிட் லாஞ்சான் வரையிலான NKVE விரைவுச்சாலையில் விழுந்த பெரும் மரங்களால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைந்த நிலையில், வாகனமோட்டிகளும் மோட்டார் சைக்கிளோட்டிகளும் இணைந்து மரங்களை அகற்றிப் பாதையைச் சீரமைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!