Latestமலேசியா

​”பயங்கரவாத நாட்டைச் சேர்ந்த நீங்களா என்னிடம் கேட்பது?”: ஐநா-வில் பாகிஸ்தான் நிருபரின் வாயை அடைத்த ஜெய்சங்கர்

நியூ யோர்க், செப்டம்பர்-27,ஐநா பொதுப் பேரவையில் உரையாற்றிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை அரசு கொள்கையாகக் கொண்டு செயல்படும் நாடுகளுக்கு எதிராகக் கடுமையான சாட்டையடி கொடுத்துள்ளார்.

​பயங்கரவாதத்தை தொடர்ச்சியாகப் பயிற்றுவித்து ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு, உலக அரங்கில் தன்னைத்தானே பாதிக்கப்பட்ட நாடாகக் காட்டிக்கொள்ள முடியாது என்றும், அண்டை நாடுகளை மிரட்டும் இத்தகைய பயங்கரவாதச் செயல்களுக்கு ஒருபோதும் பலன் கிடைக்காது எனவும் அவர் பாகிஸ்தானை மறைமுகமாக எச்சரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும், சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அந்தப் பகுதியை பாகிஸ்தான் உடனடியாகக் காலி செய்ய வேண்டும் எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

இந்நிலையில், முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்சங்கரிடம், பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் பயங்கரவாதம் குறித்துக் கேள்வியெழுப்ப முயன்றார்.

அதற்குச் சற்றும் தயங்காமல் பதிலளித்த அவர், பல ஆண்டுகளாகப் பயங்கரவாதத்தை அரசு ஆதரவோடு வளர்த்து வரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர், இந்தியாவிடம் பயங்கரவாதம் பற்றிக் கேள்வி கேட்பது நகைப்புக்குரியது என பளீரெனத் தெரிவித்தார்.

இதனால், கேள்வியால் ஜெய்சங்கரை மடக்க நினைத்த அந்த பாகிஸ்தானிய நிருபரின் முகம் வாடிப் போனது தான் மிச்சம்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ஜெய்சங்கரின் துணிச்சலான பதிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!