Latestமலேசியா

ஈப்போவில் கர்ப்பிணி நாய் உட்பட 3 தெருநாய்கள் மர்மமாக மரணம்; விஷம் கொடுக்கப்பட்டதாக சந்தேகம்

ஈப்போ, செப்டம்பர்-27,ஈப்போ, டேசா ரிஷா இண்டா (Desa Risha Indah) எனுமிடத்தில் கர்ப்பிணி நாய் உட்பட 3 தெருநாய்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் தெருநாய்களுக்கு உணவளித்து வரும் ஜி. மகேஸ்வரி, சனிக்கிழமை காலை சுமார் 7.30 மணியளவில் வழக்கமாக உணவுக்காக வரும் நாய்கள் வராததைத் தொடர்ந்து அவற்றைத் தேடியுள்ளார்.

அப்போது 3 நாய்களும் இறந்து கிடந்ததாகவும், அவற்றின் வாயில் நுரை காணப்பட்டதால் அவை விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 6 ஆண்டுகளாக அப்பகுதியில் தெருநாய்களுக்கு உணவளித்து வருவதாக கூறிய மகேஸ்வரி, அங்கு சுமார் 9 நாய்கள் இருந்ததாகவும், மற்ற நாய்களைத் தொடர்ந்து தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

இறந்த 3 நாய்களில் இரண்டினை மகேஸ்வரி அருகிலேயே புதைத்த நிலையில், மற்றொன்றை வேறு யாரோ புதைத்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தப் புகாரும் அல்லது தகவலும் கிடைக்கவில்லை என ஈப்போ மாவட்டப் போலீஸ் தலைவர் ACP Muhammad Najib Hamzah தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், கூறப்பட்ட சம்பவத்திற்கான ஆதாரங்கள் எதையும் அங்கு கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!