Latestமலேசியா

PLKN பயிற்சிக் காலத்தை 90 அல்லது 180 நாட்களாக நீட்டிக்க Zahid பரிந்துரை

கோலாலம்பூர், நவ.16-PLKN எனும் தேசிய சேவைப் பயிற்சித் திட்டக் காலத்தை 90 அல்லது 180 நாட்களாக நீட்டிக்க துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi பரிந்துரைத்திருக்கிறார். அதன் மூலம் பயிற்சியாளர்களின் மன உறுதியையும் ஒழுக்கத்தையும் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

எனினும் திட்டத்திற்குத் தேவையான நிதியை அரசாங்கத்தால் ஒதுக்க முடியுமா என்பதைப் பொறுத்தே அப்பரிந்துரை அமையும். தற்போதைய 45 நாள் பயிற்சிக் காலம் போதுமானதாக இருந்தாலும், திட்டத்தை விரிவுபடுத்த விரும்பினால் குறைந்தபட்சம் 90 நாட்களாகவும், படிப்படியாக 180 நாட்களாகவும் நீட்டிக்கலாம் என அவர் கூறினார்.

PLKN 3.0 Wira Muda Negaraதொடர் 4/2026-ன் நிறைவு அணிவகுப்பைத் தொடக்கி வைத்த பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Zahid அதனைத் தெரிவித்தார்.

மேலும், ஓராண்டு காலப் பயிற்சி உள்ளிட்ட தேசிய சேவைத் திட்டங்களைக் கொண்ட நாடுகள், நீண்டகால அடிப்படையில் ஒழுக்கமும் மன உறுதியும் கொண்ட தலைமுறையை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளதை துணைப் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே, முன்னாள் PLKN பயிற்சியாளர்களை பேரிடர் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுத்துவது குறித்தும் அரசாங்கம் ஆராயும். தேவைப்படும் நேரங்களில் திரட்டுவதற்கு ஏதுவாக, அவர்களின் விவரங்களைத் தொகுத்து வைத்திருக்கவும் திட்டமிடப்படுவதாக அவர் கூறினார்.

தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் நிர்வாக குழுக்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், முன்னாள் பயிற்சியாளர்கள் பணியில் இருந்தாலும், பேரிடர் காலங்களில் அல்லது அவர்களின் சேவை தேவைப்படும் சூழல்களில் தன்னார்வலர்களாகப் பங்களிக்க வழிகளை ஆராயலாம் என Zahid குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!