Latestமலேசியா

சிகரெட், வேப் விற்பனை செய்யும் முஸ்லிம்களுக்கும் வழிகாட்டுதல்களைப் பரிசீலிக்க வேண்டும்: ஜாகிமிடம் கோரிக்கை என ஜாகிம் கூறினார்

கோலாலம்பூர், நவ.16-மதுபானம் விற்பனை செய்யும் கடைகளில் பணிபுரியும் முஸ்லிம்களுக்கான வழிகாட்டுதல்களைப் போல, சிகரெட் மற்றும் வேப் விற்பனை செய்யும் கடைகளில் பணிபுரியும் முஸ்லிம்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். மலேசிய புகையிலைக் கட்டுப்பாட்டு மன்றம் ஜாகிமை அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது.

புகை மற்றும் வேப் புகைத்தல் ஹராம் எனக் கருதப்பட்டால், அவற்றை விற்பனை செய்வது மற்றும் விநியோகிப்பது ஆகியவற்றுக்கும் மத வழிகாட்டுதல்கள் தேவை என அம்மன்றத்தின் பொதுச் செயலாளர் Sha’ani Abdullah தெரிவித்தார். அதேவேளை, பொருட்கள் மீதான மதக் கட்டுபாடுகளுக்கும் அவற்றின் வணிகச் சங்கிலியில் பணிபுரியும் தனிநபர்களின் பொறுப்புக்கும் இடையே வேறுபாடு காணப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

புகைப்பது ஹராம் என 1995-ஆம் ஆண்டு தேசிய fatwa மன்றம் அறிவித்திருந்தது. அதே சமயம், 2015-ஆம் ஆண்டு மின்னணு சிகரெட் மற்றும் வேப் புகைப்பது ஹராம் என்றும் அது கூறியிருந்தது. இருப்பினும், அப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் முஸ்லிம்கள் வேலை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு அப்பொருட்களின் பரிவர்த்தனைகளைக் கையாளும் முஸ்லிம் காசாளர்கள் குறித்து கருத்துரைத்த சிலாங்கூர் முஃப்தி துறை, அது சந்தேகத்திற்குரிய நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருந்தது

இவ்வேளையில், சமையலறைகள் மற்றும் உணவு தயாரிக்கும் இடங்களில் புகை மற்றும் வேப் புகைப்பதைத் தடுக்க வேண்டும் என Sha’ani கேட்டுக் கொண்டார். உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கும் புகையில்லாத பாதுகாப்பான பணிச்சூழல் அவசியம். மத வழிகாட்டுதல்கள், ஹலால் விதிமுறைகள், பணியிடப் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார விதிகள் ஒன்றுக்கொன்று ஏற்ற வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!