
பேராக், நவம்பர் 16 – பேராக், லுமூட்டில் (Lumut), எஸ்பிளனேட் விங் (Esplanade pWing) நடைபாதைக்கு அருகிலுள்ள கரைப்பகுதியில் பெரிய கப்பல் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை நிகழ்ந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மஞ்சோங் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் (Hasbullah Abd Rahman) இதனை உறுதிப்படுத்தினார்.
வைரலான காணொளியில், கப்பல் கரைப்பகுதியை நெருங்கி வந்து மோதியதில், கரையின் ஒரு பகுதி சேதமடைந்து உடைந்திருப்பது பதிவாகியுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறிய ஒருவர், கப்பல் திடீரென வேகமாகச் சென்று நிற்காமல் கரையில் மோதியதாகவும், அப்போது பலத்த சத்தம் கேட்டதாகவும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.



