
கோலாலம்பூர், நவம்பர் 16 – சிலாங்கூர் பட்டத்து இளவரசரின் உதவியாளர் (ADC) எனப் போலியாக நடித்து, சொத்து வாங்கும் ஒப்பந்தம் மூலம் மோசடி செய்த 40 வயது ஆடவனுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
பிரபல ஆடவர் ஒருவரை ஏமாற்றி, தனது வங்கிக் கணக்கிற்கு 30,000 ரிங்கிட் பணத்தை மாற்றச் செய்ததாக அவர் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனையை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில், அவருடைய வருங்கால மனைவி தன் மீதான இரண்டு கூட்டுக் குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.
இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு மே 10 மற்றும் 12ஆம் தேதிகளில் வாங்சா மாஜுவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு 3,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டதுடன், அடுத்த விசாரணை டிசம்பர் 16ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டது.



