Latestமலேசியா

‘Beat-La Gaana’ இசை வெளியீடு கோலாகலம்; 400 பேர் பங்கேற்பு

ஷா ஆலாம், செப்- 17 – மலேசியக் கலைஞர் AG. பரஞ்சோதி ராஜேந்திரனின் புதிய படைப்பான ‘Beat’le Gaana’ இசைக் காணொளி, ஷா ஆலாமில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

TSR Conference Hall-இல் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சுமார் 400 பேர் கலந்து கொண்டதுடன், 24 உள்ளூர் கலைஞர்களும் வருகை தந்து பரஞ்சோதிக்கு ஆதரவு வழங்கினர். பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறி விழாவை மேலும் வண்ணமயமாக்கின.

இப்பாடலுக்கு Charandev இசையமைத்துள்ள நிலையில், பாடல் வரிகளை எழுதி, இசையமைத்து பாடியுள்ளார் ஏ.ஜி. பரஞ்சோதி. இயக்கம் மற்றும் நடன அமைப்பை Boopathy மேற்கொண்டுள்ளார். மேலும், பிரபல கலைஞர்களான Navin மற்றும் Anthony Daasan உள்ளிட்ட பலரின் ஆதரவும் இப்பாடலுக்குக் கிடைத்துள்ளது.

சுங்கை பூலோ Persatuan Kebajikan Rakyat தலைவர் செல்வராஜன் மற்றும் பிரபு தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பரஞ்சோதியின் இசைப் பயணத்திற்குத் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு குறித்து அவர்கள் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

சிறுவயதில் உருமி மேளம் மற்றும் பக்திப் பாடல்களுடன் தனது இசைப் பயணத்தைத் தொடங்கிய பரஞ்சோதி, தற்போது அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதேவேளையில், வளர்ந்து வரும் மலேசியக் கலைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதே தனது அடுத்த இலக்கு என அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் படமாக்கப்பட்ட ‘Beat’le Gaana’ இசைக் காணொளிக்கு, விஜய் தொலைக்காட்சியின் ‘சின்ன மருமகள்’ தொடர் புகழ் நடிகர் நவீன் குமார் ஆதரவு வழங்கியுள்ளார். இப்பாடலில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மற்றும் பரஞ்சோதியின் இசைப் பயணம் குறித்தும் அவர் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டார்.

‘Beat’le Gaana’ இசைக் காணொளியில் நடித்த நாயகியும், பாடல் வெளியான மகிழ்ச்சி மற்றும் அதில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

இதனிடையே, மலேசிய இசைத்துறையின் பிரபல கலைஞர் Psycho Mantra, பரஞ்சோதியின் புதிய படைப்புக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக இசையின் மீதான ஆர்வத்துடன் தொடர்ந்து பயணித்து வரும் பரஞ்சோதிக்கு, ‘Beat’le Gaana’ அவரது 60ஆவது பாடல் என்ற புதிய மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

மலேசியக் கலைஞரின் 60ஆவது படைப்பாக வெளிவந்துள்ள ‘Beat’le Gaana’ இசைக் காணொளியை நீங்களும் பார்த்து, பாடலைக் கேட்டு, AG. பரஞ்சோதி ராஜேந்திரனின் இசைப் பயணத்திற்கு உங்கள் ஆதரவை வழங்கலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!