Latestமலேசியா

பூச்சோங் அடுக்குமாடி படிகட்டில் கருப்பசாமி சிலை இடமாற்றம்

பூச்சோங், மார்ச்-13-பூச்சோங், டேசா தஞ்சோங் அடுக்குமாடி குடியிருப்பு படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த கருப்பசாமி சிலை தொடர்பான சர்ச்சை தீர்க்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி, அச்சிலை ஆபத்து அவசர நேரங்களில் வெளியேறும் பாதையை மறைப்பதாக விவாதம் சூடுபிடித்தது.

இதையடுத்து மலேசிய இந்து சங்கத்தின் பூச்சோங் கிளையின் பிரதிநிதிகளும், கின்றாரா நகராண்மைக் கழக உறுப்பினர் ஒருவரும் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர், உரிமையாளர் சிலையை தற்காலிகமாக அடித்தளத்துக்கு மாற்றி, பின்னர் பொருத்தமான இடத்திற்கு மாற்ற ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், பொது மக்கள் பகிர்ந்து பயன்படுத்தும் இடங்களில் தெய்வச் சிலைகள் அல்லது கட்டுமானங்களை வைக்க வேண்டாம் என மலேசிய இந்து தர்ம மாமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது பாதுகாப்பு அபாயங்களையும், குடியிருப்பாளர்களிடையே மோதல்களையும் தவிர்க்க உதவும் என அறிக்கை வாயிலாக அது கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!