கோலாலம்பூர், ஏப் 17 – இ.பி.எப் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அதன் 1ஆவது கணக்கை கொண்ட சந்தாதாரர்கள் ஓய்வுதிய கணக்கு என்றும் 2 ஆவது கணக்கு Account Sejatera ( சுபிட்சம் கணக்கு )என்றும் புதிய 3ஆவது கணக்கு Flexible account( தாரளமாயமான கணக்கு) என்ற பெயரில் செயல்படும் என இ.பி.எப்பிற்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன. மூன்றாவது கணக்கு இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் இம்மாத இறுதியில் அந்த புதிய கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. 55 வயதுக்கும் குறைவான இ.பி,.எப் சந்தாதாரர்களின் இரண்டு கணக்குகள் மே 11 ஆம்தேதியிலிருந்து மூன்று கணக்குகளாக மறுசீரமைக்கப்படும்.
தற்போது 55 வயதுக்குட்பட்ட சந்தாதாரர்களுக்கு தங்களது சந்தா தொகையில் 70 விழுக்காடு தொகை முதலாவது கணக்கிற்கும், எஞ்சிய 30 விழுக்காடு தொகை இரண்டாவது கணக்கிற்கும் வரவு வைக்கப்பட்டு வந்தது. 3ஆவது கணக்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சந்தாதொகையில் 75 விழுக்காடு 1ஆவது கணக்கிற்கும், 15விழுக்காடு சந்தா தொகை 2ஆவது கணக்கிற்கும், 3ஆவது கணக்கில் 10 விழுக்காடு தொகையும் வரவில் வைக்கப்படும்.