Latestமலேசியா

F&B துறையை இலக்காகக் கொண்டு ‘ஜாஸ்மின் கிரிம் கெலாபா’ அறிமுகம்

உயர்தர அரிசி வகைகளுக்குப் பெயர் பெற்ற ஜாஸ்மின் ஃபுட் கார்ப்பரேஷன் (Jasmine Food Corporation) புதிய தயாரிப்பாக ‘ஜாஸ்மின் கிரிம் கெலாபா’ (Jasmine Krim Kelapa) என்ற தேங்காய் கிரீமை அறிமுகப்படுத்தியுள்ளது.

உணவகங்கள், ஹோட்டல்கள், உணவுச் சேவைத் துறை மற்றும் சிறு, நடுத்தர தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் 1 லிட்டர் அளவில் மட்டும் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதிக தடிமனான கிரீம் தேவை என வணிகர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் அந்த ஒரு லிட்டர் பேக் தயாரிக்கப்பட்டுள்ளதாக Jasmine Food Corporationனின் சந்தைப்படுத்தும் பிரிவுத் தலைவர் Kow Ai Nah தெரிவித்தார்.

ஒரு பேக் 12 ரிங்கிட் முதல் 13 ரிங்கிட் வரையிலான விலையில் விற்கப்படுகிறது. அதில் 24 விழுக்காடு கொழுப்புச் சத்து உள்ளது. அது ரெண்டாங், கறி மற்றும் பாஸ்தா உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளைத் தயாரிக்க ஏற்றதாக இருக்கும்.

Jasmine நிறுவனம் ஏற்கனவே 200 மிலி அளவிலான ‘ஜாஸ்மின் சந்தாண் கெலாபா’ (Jasmine Santan Kelapa) தயாரிப்பை அறிமுகப்படுத்தியிருந்தது. அதில் சுமார் 18 சதவீத கொழுப்புச் சத்து இருப்பதால், அது காய்கறி உணவுகள் மற்றும் பாரம்பரிய பலகாரங்கள் போன்ற இலகுவான உணவுகளுக்குப் பயன்படுத்த ஏற்றதாக உள்ளது.

புதிய ‘ஜாஸ்மின் கிரிம் கெலாபா’வை வாங்க விரும்பும் வணிகர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தொடர்பு கொள்ளலாம். விற்பனைப் பிரதிநிதிகள் வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு ஆர்டர்களைப் பெறுவார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!