Latestமலேசியா

திரெங்கானுவில் விபத்துக்குப் பிறகு முதியவரைத் தாக்கிய ஆடவனுக்கு வலை வீச்சு

திரெங்கானு, நவம்பர் 24 – திரெங்கானு, பாசிர் பாஞ்சாங் பகுதியில் சாலை விபத்தைத் தொடர்ந்து முதியவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரைத் தேடி அவரது குடும்பத்தினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பின்னால் வந்த கார் மோதியதால் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு, தனது தந்தை வாகனத்தின் நிலையைப் பார்க்க வெளியே வந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரைத் தாக்கியதாக பாதிக்கப்பட்டவரின் மகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட காணொளியில், கருப்பு ஜாக்கெட் மற்றும் தொப்பி அணிந்த நபர் முதியவரின் முகத்தில் முழங்கையால் தாக்கியதில் அவர் கீழே விழுவது பதிவாகியுள்ளது.

பின்னர், அந்த நபர் மற்றொருவருடன் ஊதா நிற பெரோடுவா அல்சா காரில் அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான டாஷ்கேம் காணொளிகள் அல்லது தகவல்கள் வைத்திருப்பவர்கள் உடனடியாக முதியவரின் குடும்பத்தாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!