Latestமலேசியா

FRIM Bidor வனப்பகுதியில் தீ; தொடரும் தீயணைப்பு பணி

ஈப்போ, செப்டம்பர் 7 – பேராக் பீடோர் பகுதியிலுள்ள மலேசிய வன ஆய்வு நிறுவனமான FRIM வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீயில் சுமார் 2.42 ஹெக்டேர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டது.

நேற்று மாலை தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பீடோர் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அருகிலிருந்த குளத்திலிருந்து தண்ணீர் எடுத்து, 213.3 மீட்டர் நீளமுள்ள குழாய் மூலம் இரண்டு நீர்த்தாரைகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதுடன், மொத்த தீப்பரவல் பகுதியில் சுமார் 15 விழுக்காடு மட்டுமே எஞ்சியிருந்தது.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக நள்ளிரவு 12 மணிக்கு தீயணைப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தீ மேலும் பரவும் அபாயம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தீயை முழுமையாக அணைக்கும் பணி தொடரப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!