Latest

Kelana Jaya LRT வழித்தடத்தில் மெல்லிய கம்பியால் சிறிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டது – RapidKL

கோலாலம்பூர், ஜூலை-1-Kelana Jaya வழித்தடத்தில் நேற்று LRT ரயிலை உட்படுத்திய சிறிய அளவிலான வெடிப்புக்கு, மின் விநியோக அமைப்பில் சிக்கிய ஒரு மெல்லிய கம்பிதான் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

புத்ரா ஹைட்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த ரயில் Taman Jaya நிலையத்தில் இருந்த போது இரவு சுமார் 7.18 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக RapidKL அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில், உருகிய அந்த மெல்லிய கம்பி ரயில் அல்லது தண்டவாளத்தின் பாகம் அல்ல என்பது கண்டறியப்பட்டது. மின் விநியோக அமைப்பில் அந்தக் கம்பி சிக்கியதால் இந்தச் சிறிய வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக அது கூறியது.

அச்சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த ரயில் உடனடியாக சேவையிலிருந்து நீக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. Kelana Jaya வழித்தடத்தில் சேவையும் பாதிக்கப்படவில்லை. தண்டவாளத்தில் பாதிப்பில்லை. அது பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பாக இருப்பதாக RapidKL மேலும் குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!