கோலாலம்பூர், ஜூன்-29 – KL-Karak நெடுஞ்சாலையில் அரசுத் துறையொன்றின் அம்புலன்ஸ் வாகனம் குப்புறக் கவிழ்ந்த வீடியோ வைரலாகியுள்ளது.
அது, பூர்வக்குடி மக்கள் மேம்பாட்டுத் துறையின் (JAKOA) அம்புலன்ஸ் வண்டியாகும்.
அவ்விபத்து, அவ்வழியே வந்த மற்றொரு வாகனத்தின் dashcam-மில் பதிவாகி, careta_Malaysia என்ற Instagram பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
வலப்புறத்தில் போய்க் கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, இடப்புறத்தில் இருந்த நீல நிற காருடன் மோதி, 2-3 முறை கவிழ்ந்து சாலையோரத் தடுப்பில் மோதி நிற்பது வீடியோவில் தெரிகிறது.
வண்டி கவிழ்ந்து, அதனுள் இருந்து ஒரு குழந்தையும் பெரியவரும் வெளியில் தூக்கி வீசப்படுவது நெஞ்சைப் பதற வைக்கிறது.
அவர்களுக்கு என்னவானது என்பது குறித்து தகவலேதும் இல்லை.