செப்பாங், செப்டம்பர் -11 – KLIA விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் வரும் வழியில் சாலையில் விழுந்து கிடந்த காங்கிரீட் கற்களை மோதி சுமார் 20 வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகின.
செப்பாங்கில் எண்ணெய் நிலையமொன்றின் அருகே நேற்றிரவு அச்சம்பவம் நிகழ்ந்ததாக தெரிய வருகிறது.
அக்கற்களில் இரும்புக் கம்பிகளும் இருப்பதால், மோதும் வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருந்தது.
இதையடுத்து, ரோந்து போலீசார் சம்பவ இடத்தில் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புக்கு நின்றிருந்த புகைப்படங்களும் வெளியாகின.
இந்நிலையில் அந்த காங்கிரீட் கற்கள் எப்படி சாலையில் விழுந்தன என்பது தொடர்பான விசாரணைக்கு, dashcam பதிவிருந்தால் கொடுத்துதவுமாறு வாகனமோட்டிகளை போலீஸ் கேட்டுக் கொண்டது.
அந்த காங்கிரீட் கற்களை மோதி சுமார் 20 வாகனங்கள் சாலையோரம் கிடப்பதைக் காட்டும் புகைப்படங்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.