Latestமலேசியா

KLIA விமான நிலையத்தில் RM202.76 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்; 93 பேர் கைது

கோலாலம்பூர், அக்டோபர்-27,கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 93 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 77 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டு, 202.76 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 2,526 கிலோ கிராமுக்கும் அதிகமான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதானவர்களில் பிரிட்டன் நாட்டவர்கள் 26 பேருடன் முதலிடத்தில் உள்ளனர்.

அடுத்ததாக மலேசியர்கள் 23 பேர், சிங்கப்பூரியர்கள் 11 பேர், பிரான்ஸ் நாட்டவர்கள் 6 பேர் மற்றும் ஜப்பானியர்கள் 5 பேர் அடங்குவர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களில் கஞ்சா, ஷாபு, கெட்டமைன் மற்றும் கொக்கேய்ன் ஆகியவை அடங்கும்.

இந்தத் தகவல்களை புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் வெளியிட்டார்.

அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வார்த்தைகளை நம்பி, உள்ளே என்ன இருக்கிறது என்று ஆராயமால், மற்றவர்களின் உடைமைகளை வெளிநாடுகளுக்குக் கொண்டுச் செல்ல வேண்டாம் எனப் பொது மக்களை அவர் எச்சரித்தார்.

கடைசியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவர்கள் சிக்க வேண்டியிருக்கும் என ஹுசேய்ன் ஓமார் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!