Latestமலேசியா

KLIA-வில் 3 கடத்தல் கும்பல்கள் முறியடிப்பு; RM5.45 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

ஷா ஆலாம், ஏப்ரல்-13-மார்ச் 30 முதல் ஏப்ரல் 8 வரை, செப்பாங், KLIA சுற்று வட்டாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனைகளில், 3 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டன.

3 வெவ்வேறு சம்பவங்களில் மொத்தமாக 5.45 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஷாபு மற்றும் கஞ்சா பூக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ Shazel Kahar தெரிவித்தார்.

Keldai Dadah என அழைக்கப்படும் போதைப்பொருளைக் கடத்த உதவும் 4 சந்தேக நபர்களும் கைதாகினர்; பதின்ம வயது பெண் பிள்ளையும் அவர்களில் அடங்குவார்.

Syazwani Farhana Dron எனும் மற்றொரு பெண்ணுக்கு வலைவீசியிருப்பதாக, இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Shazel சொன்னார்.

இந்த போதைப்பொருட்கள் உள்ளூர் சந்தை மற்றும் அனைத்துலகச் அளவில் விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தன.

விமான நிலையப் பாதுகாப்புப் படை மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த பெரும் கடத்தல் கும்பல்கள் முறியடிக்கப்பட்டதாக, Shazel கூறினார்.

இதன் மூலம் சுமார் 2 லட்சத்து 73 ஆயிரம் பேர் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!