Latestமலேசியா

KLIA2 சம்பவம்; பாதுகாப்பு பணியாளரைத் தாக்கியதை வெளிநாட்டு ஆடவர் ஒப்புக் கொண்டார்

செப்பாங், ஏப்ரல்-11-அண்மையில் KLIA 2-ல் வைரலான சண்டை தொடர்பில் வெளிநாட்டு ஆடவர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 5-ஆம் தேதி விமான நிலைய சோதனைச் சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டு, Hat Yai-க்குக் செல்லும் விமானத்தைத் தவற விட்டதால், அந்நபர் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில், அவர் பாதுகாப்பு அதிகாரியைத் தள்ளிக் காயப்படுத்திய வீடியோ வைரலானது.

இதையடுத்து, 33 வயது அந்நபர், பிறருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் செப்பாங் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக ஓராண்டு சிறை தண்டனை, RM 2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தண்டனை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!