
குவாந்தான், ஜூலை-11-LPT எனப்படும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு RXZ மோட்டார் சைக்கிளோட்டிகள் உயிரிழந்துள்ளனர்.
பஹாங், குவாந்தான் அருகே, கிலோ மீட்டர் 246.4-ல் இந்த விபத்து நிகழ்ந்தது.
12 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் மோதிக்கொண்டதில், அந்த நால்வரும் உயிரிழந்தனர்.
அந்நால்வரில் ஒருவர்
ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், கார் ஒன்றின் பின்புறம் மோதியதால் அவர் கீழே விழுந்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து வந்த மற்ற வாகனமோட்டிகள், நிலைதடுமாறி ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
காரில் பயணித்த 13 வயது சிறுவன் காயமடைந்துள்ளான்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுச் செய்யப்பட்டு, போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.



