
கோலாலாம்பூர், மார்ச்-31-பசார் செனி LRT நிலையத்தில் முதல் படிவ மாணவனைக் கன்னத்தில் அறைந்த ஆடவருக்கு, 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
48 வயது Muhammad Sivakumar Perumal குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, கோலாலாம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தண்டனையை விதித்தது.
எனினும் அபராதம் செலுத்தத் தவறியதால் 2 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, அவர் நேராக காஜாங் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்..
முன்னதாக, கன்னத்தில் அறையப்பட்டதில் 13 வயது Farhan Nasir Muhammad Isa காயமடைந்து போலீஸில் புகார் செய்திருந்தார்.
ரொட்டி வாங்குவதற்காக சென்றபோது, வரிசையில் யாரும் இல்லாததால் நேரடியாக முகப்பிடத்துக்கு சென்றதாகவும், அப்போது யாரென்றே தெரியாத அந்த ஆடவர் தம்மை கனத்தில் அறைந்ததாகவும் அம்மாணவர் புகாரில் கூறினார்.
அச்சம்பவத்தின் வீடியோ வைரலாகி , கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.



