டுங்குன், ஆகஸ்ட் -24 – mpox நோய் பரவல் தாய்லாந்து வரை வந்து விட்டதால், மலேசியா மேலதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
அவ்வகையில் நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் சுகாதார பரிசோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்ளி அஹ்மாட் (Datuk Seri Dr Dzulkifli Ahmad) தெரிவித்தார்.
ஆகஸ்ட் 16 முதல் 22 வரை மொத்தம் 18 லட்சம் சுற்றுப்பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மலேசியா வந்திறங்குவோரிடம் இந்த mpox பரிசோதனை மட்டுமின்றி கோவிட்-19 பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
mpox ஆபத்து குறித்து நாடு முழுக்க அனைத்து அரசாங்க மற்றும் தனியார் சிகிச்சை மையங்களுக்கும் கையேடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வந்திறங்கிய பொது மக்களும் எப்போதும் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தோலில் சொறி சிரங்கு, கொப்பளங்கள் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக அருகிலுள்ள கிளினிக்குகளுக்குச் செல்லுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.