பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 8 – ஹரி ராயா கொண்டாட்டத்தை முன்னிட்டு, பலர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர்.
அதனால் நாடு முழுவது காணப்படும் பயணப் பரபரப்பின் ஊடே, மிட்சுபிஷி எக்ஸ்பாண்டர் ரக MPV ஓட்டுனர் ஒருவர், தனது வாகனத்தின் கூரை மீது, “செலோடெப்” ஒட்டு வில்லையை கொண்டு ஒட்டி பொருட்களை கொண்டு செல்லும் இரு புகைப்படங்கள் வைரலாகி, இணையப் பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அண்மையில், நாட்டின் நெடுஞ்சாலை ஒன்றில் அந்த அரிய காட்சி பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
சாக்லெட் நிறத்திலான ஒட்டு வில்லையை கொண்டு, சம்பந்தப்பட்ட வாகனத்தின் கூரை மீதிருந்து, பொருட்கள் கீழே விழுந்து விடாத அளவிற்கு கவனமாக ஒட்டப்பட்டிருப்பதை அந்த புகைப்படங்களில் காண முடிகிறது.
சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனரின் புத்தாக்க திறனை, இணைய பயனர்கள் சிலர் வியந்து பாராட்டி வரும் வேளை ; பலர் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“செலோடெப் அறுந்து பொட்கள் சாலையில் விழுந்தால், இதர வாகனமோட்டிகள் தான் பாதிக்கப்படுவார்கள்” என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.