Latestமலேசியா

MyKad வைத்திருப்பது மட்டுமே மலேசிய அடையாளத்தை நிரூபிக்காது: பாஸ் தகவல் தலைவர் சர்ச்சை பேச்சு

கோலாலம்பூர், ஜூலை-27-வெறும் அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே ஒருவரின் மலேசியக் குடியுரிமையை முழுமையாக நிரூபித்து விடாது என, பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார்.

​MyKad காட்டுவது ஒருவரின் தேசபக்தியையும் தேசிய அடையாளத்தையும் முழுமையாகக் காட்டப் போதாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

​நாட்டின் சமூக ஒப்பந்தம், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம், தேசிய மொழி மற்றும் அரச நிறுவனங்களின் இறையாண்மை ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதே உண்மையான குடியுரிமைக்குச் சான்று என அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, DAP தேசியத் துணைத் தலைவர் ஙா கோர் மிங் தான் ஒரு மலேசியர் என்பதை வெளிப்படுத்தும் வகையில் தனது MyKad அட்டையை பகிரங்கமாகக் காண்பித்துப் பேசினார்.

எந்த இனமும் வந்தேறிகள் என முத்திரைக் குத்தப்படக் கூடாது என்றும், வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சருமான கோர் மிங் கூறியிருந்தார்.

அதற்கு பதிலடியாக Fadhli தனது ஃபேஸ்புக் பதிவில் இவ்வாறுக் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!