Latestமலேசியா

P1P வாகன எண் ஏலம்: RM21.6 மில்லியன் வசூல்; JPJ புதிய சாதனை – அந்தோணி

கோலாலம்பூர், ஏப்ரல்-27-மலேசியப் போக்குவரத்துத் துறையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது ‘P1P’ இரக வாகனப் பதிவு எண்கள்.

அண்மையில் நடைபெற்ற ஏலத்தின் மூலம், சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) சுமார் 21.6 மில்லியன் ரிங்கிட் வருவாயைப் ஈட்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதற்கு முன்னதாக ‘M_M’ வரிசை எண்கள் ஈட்டிய 20.1 மில்லியன் ரிங்கிட் சாதனையை இது முறியடித்துள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இந்த ஏலத்தில் பலத்த போட்டிக்கு இடையே, ‘P1P ’ என்ற எண் மட்டும் ஒரு மில்லியன் ரிங்கிட்டைக் கடந்து, 1.1 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஏலம் போனது.

இதனைத் தொடர்ந்து, ​’P9P’ 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும், ‘P8P’ 613,000 ரிங்கிட்டுக்கும், ‘P6P’ 600,777 ரிங்கிட்டுக்கும், ‘P2P’ 512,000 ரிங்கிட்டுக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தத் எண் வரிசைத் தொடரில் 19,370 பேர் ஆர்வம் காட்டிய நிலையில், 5,973 பேர் எண்களைத் தட்டிச் சென்றனர்.

எஞ்சிய 4,026 எண்கள், ஏலம் முடிந்ததும் பொது மக்களுக்கு ஒதுக்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் சமூக நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் என அந்தோணி லோக் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!