Latestமலேசியா

Pei Pa Koa இருமல் மருந்து கலக்கப்பட்ட ஐஸ் கிரீம்களை விற்கத் தடை – சுகாதார அமைச்சு அதிரடி

கோலாலம்பூர், ஜூலை-30, Pei Pa Koa (Cap Ibu dan Anak) பாரம்பரிய இருமல் மருந்து கலக்கப்பட்ட ஐஸ் கிரீம்களை விற்க, சுகாதார அமைச்சு (KKM) தடை விதித்துள்ளது.

பிரபல ஐஸ் கிரீம் விற்பனை நிறுவனமொன்று, அந்த ‘கலவை ஐஸ் கிரீம்களை’ விற்பதாக முன்னதாக தகவல் வைரலானது.

அந்த விற்பனைத் தளத்தில் அமைச்சின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் நடத்திய சோதனையில், அந்த இருமல் மருந்து கலக்கப்பட்ட ஐஸ் கிரீம்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டது.

அந்த இருமல் மருந்தானது கட்டுப்படுத்தப்பட்ட பொருளாகும்.

அதோடு, எந்தவொரு கலப்பு உணவைத் தயாரிக்கவோ விற்கவோ 1983-ஆம் ஆண்டு உணவுச் சட்டம் தடைச் செய்வதையும் KKM சுட்டிக் காட்டியது.

எனவே, Pei Pa Koa ஐஸ் கிரீம்களை விற்கும் அனைத்துக் கடைகளும், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களின் பாதுகாப்புக் கருதி, அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அது தொடர்பான விளம்பரங்களும் அனைத்துத் தளங்களிலிருந்தும் அகற்றப்பட வேண்டும்.

சட்டத்தை மீறினால், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதமும் ஐந்தாண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத் தாண்டனையும் விதிக்கப்படலாமென KKM எச்சரித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!