
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையான PLUS-சின் 263.6-ஆவது கிலோ மீட்டரின் தெற்கே, மெனோரா சுரங்கப்பாதையிலிருந்து ஈப்போ நோக்கிச் செல்லும் பாதையில் நேற்று திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக இடதுபுறப் பாதை முற்றிலும் முடக்கப்பட்டு, அப்பகுதியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தீவிரப் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த PLUS நிறுவனம் மற்றும் தொடர்புடைய மீட்பு முகவர் அமைப்புகள், மண் மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும் இதில் உயிர் சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை.
இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்ட சரிவுப் பகுதியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மழைக்காலம் தொடருவதால், அப்பாதையைப் பயன்படுத்தும் வாகனமோட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



