
கோலாலம்பூர், ஜூலை 23 – கோலாலம்பூர் PPR செரி செம்பாக்கா பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்டு வியாபாரத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 61 சட்டவிரோத கட்டிடங்களை கோலாலம்பூர் மாநகராட்சி மாநகராட்சி மன்றமான DBKL நேற்று இடித்துள்ளது.
இந்தக் கட்டிடங்களில் உணவகங்கள், பானக் கடைகள், மளிகைக் கடைகள், கிடங்குகள் மற்றும் பிற வணிக நிலையங்கள் செயல்பட்டு வந்தன. கட்டிட உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டதால், அவர்கள் தங்களது பொருட்களை அகற்றிய பிறகு இடிப்பு பணி நடைபெற்றது.
நடவடிக்கையின் போது, அந்தக் கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
காவல் துறை, மின்சார வாரியமான TNB மற்றும் Air Selangor ஆகிய அமைப்புகளின் ஒத்துழைப்புடன், Projek Lestari Niaga மேம்பாட்டுத் திட்டத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக DBKL தெரிவித்துள்ளது.



